மின்னலுக்கான எச்சரிக்கை

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தெற்கு, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (22) இடியுடன் கூடிய மழை பெய்யும்போது மின்னல் தாக்கங்களும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *