அனுராதபுரம் சிறுமிக்கு நீதி கேட்டு மட்டக்களப்பில் பெண்கள் அமைப்புகள் அதிரடிப் போராட்டம்!

மதத்தின் போர்வையில் ஒளிந்துகொண்டு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்கக் கூடாது என வலியுறுத்தியும்இ அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கக் கோரியும் ‘வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு தலமையில் இன்று காலை 27.05.2026 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று காந்தி பூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

​இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டுஇ பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாகத் தங்களது பலத்த எதிர்ப்பைப் வெளிப்படுத்தியதோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வீதியோரங்களில் அணிவகுத்து நின்றுஇ குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கான நீதி குறித்துப் பல கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

​’மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம்’ என இதன்போது வலியுறுத்திய போராட்டக்காரர்கள்இ பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எந்தவொரு உயரிய மதப் பின்னணியைக் கொண்டவராக இருந்தாலும்இ அவர்களுக்கு எவ்வித மதச் சலுகைகளோ அல்லது பாதுகாப்போ வழங்கப்படக் கூடாது எனத் தெரிவித்தனர்.


​அனுராதபுரத்தில் பௌத்த துறவி (பிக்கு) ஒருவரால் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் வழக்கில்இ எவ்வித அரசியல் அல்லது மதத் தலையீடுகளும் இன்றி சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்

​மேலும்இ ‘சட்டத்தால் மறுக்கப்பட்ட பாலியல் வல்லுறவுக்கு பிணை கிடையாது’ என்ற கோரிக்கையையும் முன்வைத்த பெண்கள்இ சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டம் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


​பாதிக்கப்பட்ட சிறுமிக்குச் சட்ட ரீதியான நியாயம் கிடைக்கும் வரை மற்றும் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரும் வரை தங்களது நீதிக்கான போராட்டங்கள் ஓயாது எனப் பெண்கள் அமைப்புகள் இதன்போது தெரிவித்துள்ளமையும் அதன் பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *