ஈரான் – இஸ்ரேல் மோதல் இன்று 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், டுபாய் மற்றும் கட்டாரில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
‘ஈரானின் இரண்டு ஏவுகணைகள் கட்டாரை நோக்கி ஏவப்பட்டன. அதில் ஒன்றை கட்டார் வான் பாதுகாப்பு அமைப்பு வீழ்த்தியது. மற்றொன்று, அல் உதைத்தில் உள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய விமானப் படை தளத்தைக் குறிவைத்தது. இருப்பினும் இதில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை’ என்று கட்டார் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
