தன்சல் பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தன்சல்களை பதிவு செய்யும் பணிகள் இன்று (4) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டங்களில் இப்பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்தச் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார். 

தன்சல்களை நடத்துவது தொடர்பான விசேட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு தற்போது வெளியிட்டுள்ளதாகவும், இது குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் வினவி மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் படி, மே 30ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *