இறைச்சி, பால், முட்டை என்பவற்றை பொது மக்கள்உண்ணுதலை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு திட்டம்

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் இவ்வாண்டின் பி.எஸ்.சி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் விலங்குகளிடமிருந்து கிடைக்கபெறும் உணவுகளான இறைச்சி, பால், முட்டை என்பவற்றை பொது மக்கள் உண்ணுதலை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன் நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக பொது மக்கள் தூய பசும்பாலை நுகர்தலை ஊக்குவிக்கும் நிகழ்வு ஆரையம்பதியில் கோவில்
குளம் கால்நடை வைத்திய அதிகாரி பிரிவு ஐந்தாம் கட்டை சந்தியில் இன்று இடம்பெற்றது.

ஆரையம்பதி அரச கால்நடை வைத்திய அதிகாரி சதீஷ்காந்த் ஜதுஷ்னா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவு சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர் எம்.புலேந்திரகுமார் மற்றும் ஆரையம்பதி அரசு கால்நடை வைத்தியர் காரியாலய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *