சிவப்பு எச்சரிக்கை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *