பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் உயிரிழப்பு

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதியதில் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த, சிறுவன் உயிரிழந்த சோகச் சம்பவம் நேற்று (05) மதியம் இடம்பெற்றுள்ளது.

பொத்துவில் – பாணம வீதியின் பசரச்சேனை பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியால் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது பலமாக மோதியுள்ளது.

விபத்து நடந்த உடனே காயமடைந்த சிறுவனும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் மீட்கப்பட்டு பொத்துவில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து பொத்துவில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *