இன்றைய தினம் உலக பால் அருந்தும் தினமாகும் இத் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகம் பால் அருந்தும் திட்டத்தை கிழக்கு பல்கலைக்கழக பிள்ளையாரடி சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் முன்னெடுத்தது.
அந்த வகையில் ஜூன் முதலாம் திகதி இன்றைய தினம் உலக பால் அருந்தும் தினத்தை சிறப்பிக்கும் முகமாக கிழக்கு பல்கலைக்கழக பிள்ளையாரடி சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட மாணவர்களுக்கு தூய பசும்பாலை நுகர்தலை ஊக்குவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் பசும் பால் நுகர்வினை ஊக்குவிக்கும் பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வாக மாகாண பணிப்பாளர் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் மூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு அரச கால்நடை வைத்தியர் அலுவலக ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக பிள்ளையாரடி சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட மாணவர்களுக்கு தூய பசும்பாலை நுகர்தலை ஊக்குவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மண்முனைவடக்கு பிரதேச செயலக பிரிவு கால்நடை வைத்தியர் டுஜித்ரா லிங்கேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிள்ளையாரடி கிழக்கு பல்கலைக்கழக
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் பீடாதிபதி உட்பட விரிவுரையாளர்கள், மாணவர்கள், அரச கால்நடை வைத்தியர் அலுவலக உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் கலந்துகொண்டனர்.
