மின்னலுக்கான எச்சரிக்கை

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

இன்று (16) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு இரவு 11.00 மணிவரையில் செல்லுபடியாகும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணத்திலும், காலி, மாத்தறை, குருநாகல் மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *