நடப்பாண்டில் சீனாவின் பொருளாதாரம் 5% வளர்ச்சி

நடப்பாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% வளர்ச்சியடைந்துள்ளது.

இதற்கு முந்தைய காலாண்டில் சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி 4.5% ஆகக் காணப்பட்டதுடன் பொருளாதார நிபுணர்கள் இந்த ஆண்டு வளர்ச்சி 4.7% ஆக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், அது 5% வரை உயர்ந்ததற்கு சீனாவின் வலுவான ஏற்றுமதி வர்த்தகமே முக்கிய காரணமாக அமைந்ததாக அந்நாட்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஈரான் – அமெரிக்கப் போரின் விளைவாக எரிபொருள், இரசாயனப் பொருட்கள் மற்றும் உலோகங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. 

உலகச் சந்தையின் சவால்களுக்கு மத்தியிலும் சீனப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட சிறந்த வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *