2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை இன்று (17.02.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின்படி, நாடு முழுவதும் 3,545 மையங்களில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இந்தத் பரீட்சை இன்று முதல் 2026 பெப்ரவரி 26 வரை நடைபெறும்.

பரீட்சை தொடங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பரீட்சார்த்திகள் அந்தந்த பரீட்சை மையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *