மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளுக்கு விமானங்களில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைப்பு

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு விமானப்படை விமானங்களின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டது.

மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் திருகோணமலை மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இலங்கை விமானப்படையின் Y – 12 ரக விமானம் நேற்று (30) இரத்மலான விமானப்படை தளத்திலிருந்து சீனாக்குடா விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *