பேருந்துடன் லொறி மோதி விபத்து

A9 வீதியில் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். 
​
கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் பயணித்த லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 
​
விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்று பயணிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
​
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *