திக்வெல்லையில் மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று (13) காலை ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அம்பலாந்தோட்டை திசையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த வேளையில், கதிர்காமம் நோக்கிப் பயணித்த இ.போ.ச. பேருந்துடன் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *