கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு

கொட்டாவை மாலபல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.  இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பலத்த மின்னல் தாக்கம் – வௌியான எச்சரிக்கை

மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த எச்சரிக்கை […]

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா? அரசின் நிலைப்பாடு

தற்போதைய சூழ்நிலையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் எதர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.  இன்று (08) பாராளுமன்றத்தில், வைத்து சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமைய எதிர்காலத்தில் மின்சாரக் […]

மாணவி அம்ஷிகாவுக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் இந்த […]

புதிதாகப் பிறக்கும் குழந்தைகளிடையே தலசீமியா நோய் அதிகரிப்பு

நாட்டில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 குழந்தைகள் தலசீமியா நோயாளிகளாக அடையாளம் காணப்படுவதாக அந்த […]

லாகூருக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம்

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.  இந்திய- பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று (08) காலை பாகிஸ்தானின் லாகூரில் […]

சமந்த ரணசிங்க பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (08)பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். காலமான கோசல நுவான் ஜயவீரவால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  […]

கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இன்று (7) அவர் வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் […]

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது. 2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) […]