சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படுவது தொடர்பில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
திகன மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளுக்கே இந்த நீர் விநியோகத் தடை பொருந்தும்.
இதற்கமைய, இன்று (23) காலை 8.30 மணிமுதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை 48 மணித்தியால நீர்வெட்டு இடம்பெறவுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அப்பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள அவசியமான பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
