அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் 70 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதற்காக 3.1 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதோடு, இதன் முதற்கட்டமாக 622,462 முதியோர்கள் பயனடையவுள்ளனர்.

இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 71,339 முதியோர்களுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது. 

நிதியானது, இன்று நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *