நிலவும் மோசமான காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தற்போதைய அறிக்கையின்படி, 132 பேர் உயிரிழந்துள்ள நிலையில்179,868 குடும்பங்களைச் சேர்ந்த 646,567 தனிநபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சுமார் 716 பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், 176 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ள 22,212 குடும்பங்களைச் சேர்ந்த 78,010 தனிநபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பதுளை மாவட்டத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து கேகாலை மாவட்டத்தில் 09 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 08 பேரும், நுவரெலியாவில் 6 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 7 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 8பேரும், மொனராகலை மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
