மட்டக்களப்பு மக்கள் மிக அவதானம் : அபாய எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று ஆற்றுப் படுகைகளுக்கு நீர்ப்பாசனத் துறை வெள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இன்று மாலைக்குள் சோமாவதிய மற்றும் மனம்பிட்டிய பகுதிகள் நீரில் மூழ்க வாய்ப்புள்ளதாகவும் நீர்ப்பாசன பணிப்பாளர் (நீரியியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார எச்சரித்துள்ளார்.

குறிப்பாக குச்சவெளி, பதவி ஸ்ரீ புர, கெபிதிகொல்லேவ, கோமரன்கடவல, ஹொரொவ்பத்தான, மொரவெவ, கஹடகஸ்டிகிலிய மற்றும் கலேன்பிந்துனுவெவ பிரதேச செயலாளர் பிரிவுகளில், யான் ஓயாவின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் அப்பகுதி வழியாக பயணிக்கும் சாரதிகள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, முந்தேனி ஆறு ஆற்றுப் படுகை பகுதியில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் மஹாஓயா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முந்தேனி ஆறு ஆற்றின் தாழ்வான பகுதிகளிலும், முந்தேனி ஆறு படுகை பகுதியில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் துறை அறிவித்துள்ளது.

கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று வடக்கு, ஏறாவூர் பற்று, மஹாஓயா, பதியத்தலாவ, தெஹியத்தகண்டி, திம்புலாகலை, வெலிகந்த, மஹியங்கனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட மாதுரு ஓயா பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பிரதேசங்கள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது.

குறிப்பாக குச்சவெளி, பதவி ஸ்ரீ புர, கெபிதிகொல்லேவ, கோமரன்கடவல, ஹொரொவ்பத்தான, மொரவெவ, கஹடகஸ்டிகிலிய மற்றும் கலேன்பிந்துனுவெவ பிரதேச செயலாளர் பிரிவுகளில், யான் ஓயாவின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் அப்பகுதி வழியாக பயணிக்கும் சாரதிகள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கல் ஓயா ஆற்றுப் படுகையின் கீழ் பகுதியில் தற்போது சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், அம்பாறை, இங்கினியாகலையில் உள்ள சேனநாயக்க கடலின் நீர் கொள்ளளவு தற்போது அதன் அதிகபட்ச நீர் கொள்ளளவை எட்டியுள்ளதுடன் சேனநாயக்க சமுத்திரத்தின் கீழ் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தமண, அம்பாறை, எரகம, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி, ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு இந்த நிலைமை மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடும். 

அனர்த்த முகாமைத்துவ மையத்தில் இன்று (26) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நீர்ப்பாசன பணிப்பாளர் (நீரியியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர், “நேற்று (25) அம்பாறையில் பதிவான அதிகபட்ச மழைவீழ்ச்சி 225 மி.மீ. ஆகும். சேனநாயக்க சமுத்திரத்தின் வான்கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும், மற்ற நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டதிலிருந்து தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும்” என்று தெரிவித்துள்ளார். 

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக 25 பெரிய குளங்களும் 26 நடுத்தர அளவிலான குளங்களும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *