நாட்டில் அவசர கால நிலை பிரகடனம்..

நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். 

டிட்வா புயலால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் 100இற்கும் மேற்பட்ட மக்ககள் பலியாகியுள்ளதுடன் எண்ணற்றவர்கள் காணாமல் போயுள்ளனர். 

இந்நிலையில், மேலும் தீவிரமடைந்து வரும் காலநிலையின் சீற்றம் காரணமாக தற்போதைய நிலைமை இன்னும் மோசமடையலாம் என கூறப்படுகின்றது. 

இதற்கிடையில் ஏற்படும் பாதிப்புக்களையும் உயிரிழப்புக்களையும் குறைக்கும் முகமாகவும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *