டித்வா புயல் இன்று (28) காலை 11.30 மணியாகும் போது 30 கிலோ மீற்றர் தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சரியாக அட்சரேகை 8.4° N மற்றும் தீர்க்கரேகை 81.0° E இல் நிலைப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டில் அநேகமான பகுதிகளில் மழை முகில் நிறைந்து காணப்படும்.
வடக்கு, வடமத்தி, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 200 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடை மழைவீழ்ச்சி பதிவாகும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில்150 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்க படுகிறது. ஏனைய பகுதிகளில் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும்.
காற்றின் வேகம் மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் அமையும் என்பதுடன் இடைக்கிடை காற்றின் வேகம் 80 – 90 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும்.
