இன்றைய வானிலை

சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (19) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


சில இடங்களில் 50 மி.மீ க்கு மேல் மிதமானது பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.


இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. 


மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்  சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *