இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஏற்படுத்தப்பட்ட 6 வாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 24 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக இதுவரை 1,099 பலஸ்தீனிய பணய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
இந்நிலையில் காஸாவில் இன்னும் 73 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் வரும் சனிக்கிழமை (22) விடுதலை செய்கிறது. மேலும், தங்கள் பிடியில் உள்ள பணய கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடல்களையும் ஹமாஸ் நாளை (20) இஸ்ரேலிடம் ஒப்படைக்கிறது.
இதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட பலஸ்தீனியபணய கைதிகளை விடுதலை செய்கிறது. மேலும், காஸாவுக்குள் தற்காலிக தங்கும் குடியிருப்புகள், கனரக வானங்களையும் அனுமதிக்கிறது.