வான் எல்லையை மீண்டும் மூடியது ஈரான்

ஈரான் தனது, வான் எல்லையை மீண்டும் மூடியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஈரானின் போக்குவரத்து அமைச்சரகத்தின் செய்தி தொடர்பாளர் மஜித் அகவன் கூறுகையில்,

“சிவில் விமான போக்குவரத்து ஆணையகத்தின் ஒருங்கிணைப்பு குழு எடுத்த முடிவின் அடிப்படையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் மத்திய மற்றும் மேற்கு பகுதியின் வான் பரப்பை மூடியிருக்கிறோம். இந்த பகுதியில் சர்வதேச விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், கிழக்கு பகுதியை பயணிகள் விமானங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமேனி என 3 விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன.

திடீரென மீண்டும் வான் பரப்பை ஈரான் மூடியிருப்பது மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *