மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் வாக்களிப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தலின் வாக்களிக்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.

இன்று (06) காலை 7 மணி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 447 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிக்கும் பணிகள் சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 நகரசபை, 1 மாநகரசபை, 9 பிரதேச சபை உட்பட 12 உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள 144 வட்டாரங்களில் இருந்து 146 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் போனஸ் ஆசனம் உட்பட மொத்தமாக 274 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இத் தேர்தலில் 11 அரசியல் கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் உட்பட 101 கட்சிகள் குழுக்கள் களமிறங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 55 ஆயிரத்து 520 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 447 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *