நாளை விண்வெளி செல்லவுள்ள சுபான்ஷு சுக்லா

அக்சியம் ஸ்பேஸ் அக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா  நாளை (25) விண்வெளிக்கு செல்லவுள்ளார் அவருடன் 3 விண்வெளி வீரர்களும்  செல்ல உள்ளனர்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ரொக்கெட் மூலம் ட்ராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடைசியாக 19-ம் திகதி ரொக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்தது.

இந்நிலையில், அக்சியம் 4 திட்டம் நாளை (25) செயல்படுத்தப்படும் என நாசா அறிவித்துள்ளது.

புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் ட்ராகன் விண்கலத்தில் நால்வரும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *