சீரற்ற காலநிலையால் 21 ஆயிரம் பேர் பாதிப்பு

நுவரெலியா, கண்டி, பதுளை, குருநாகல், காலி உட்பட நாட்டில் 16 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து 361 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 591 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *