காத்தான்குடி காங்கேயன்னோடை பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவரை நேற்று (16) இரவு கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று இரவு பதூர்பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் சட்டவிரோதமாக வைத்திருந்த 3,492 போதை மாத்திரைகளுடன் 36 வயதுடைய ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுத்து வருதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.