தென் மாகாணத்தின் சில இடங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மாவட்டங்களிலும் இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, சபரகமுவ, மேற்கு, வடமேற்கு மாகாணங்களிலும் சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவக்கூடும்.
அனுராதபுரம், காலி, மாத்தறை, மொனராகலை, மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் இதே வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றுடன் மின்னல் தாக்கத்துக்கான சாத்தியமும் இருப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
