YR4 விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகரிப்பு

எதிர்வரும் 2032-ஆம் ஆண்டில் YR4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு 1.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 1.3 சதவீதம்தான், அதாவது ஏறத்தாழ 99 சதவீதம் அது ஆபத்தில்லாமல் பூமியைக் கடந்துவிடும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த வாரம் கூறியிருந்தது. இருந்தாலும் அதன் நகா்வைத் தொடா்ந்து கண்காணித்து வரும் ஆய்வாளா்கள் ஒய்ஆா்4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 2.3 சதவீதம் என்று தற்போது தெரிவித்துள்ளனா்.

இருந்தாலும், அந்த விண்கல் குறித்து இன்னும் ஏராளமான தரவுகள் பெறப்பட வேண்டியுள்ளது எனவும், அவை கிடைத்தால் அது பூமியை தாக்காது என்று பின்னா் தெரியவரும் என்றும் நிபுணா்கள் கூறினா். ஏற்கெனவே இதே போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட விண்கற்கள், பின்னா் கூடுதல் தரவுகள் கிடைத்த பிறகு ஆபத்தற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

130 முதல் 300 அடிவரை குறுக்களவு கொண்ட அந்த விண்கல் பூமியைத் தாக்கினாலும் பூமியில் மனித குலம் அழிந்துவிடாது; எனினும், அது விழுந்த இடத்தில் கணிசமான நிலப்பரப்பை அழிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *