5 இலட்சம் யூரோ பெறுமதியான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஜேர்மனி மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளிலிருந்து 5 இலட்சம் யூரோ (500,000 Euro) பெறுமதியான 69,000 கிலோகிராம் எடையுடைய அனர்த்த நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு விசேட சரக்கு விமானம் ஒன்று இன்று (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 

இந்த விமானத்தில் கூடாரங்கள், சமையல் உபகரணங்கள், மெத்தைகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பெருமளவான நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

குறித்த நிவாரணப் பொருட்களை ஏற்றிய போயிங் – 747 (Boeing-747) ரக பாரிய சரக்கு விமானம், இன்று அதிகாலை 04.30 மணியளவில் லீக்  நகரிலிருந்து கட்டுநாயக்கவை வந்தடைந்தது. 

இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக இலங்கைக்கான ஜேர்மனிய பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிபொன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *