11 மாவட்டங்களில் அதியுச்ச மண்சரிவு அபாயம்: சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் நீடித்து வரும் கடும் மழைவீழ்ச்சி காரணமாக, 11 மாவட்டங்களுக்கு அதிகபட்ச மண்சரிவு அபாய எச்சரிக்கையான மூன்றாம் நிலை (சிவப்பு) எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகியன அடங்குகின்றன.

இந்த மாவட்டங்களில் உள்ள மலைப்பாங்கான மற்றும் அபாயம் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பதுடன், அதிகாரிகள் வெளியேறுமாறு அறிவுறுத்தினால் தாமதமின்றிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதிக மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *