பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான Harbin Z-9 ஹெலிகொப்டர் கொலன்னாவா, வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா பகுதிகளில் வெள்ளநீரில் சிக்கியிருந்த நால்வரை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளது.
மீட்பு நடவடிக்கைகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் குறித்த ஹெலிகொப்டர் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
