மியன்மார் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,719ஐ எட்டியுள்ளதோடு மேலும் 3,000க்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு 4,521 பேர் காயமடைந்ததாகவும், 441 பேர் காணாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந் நிலநடுக்கத்தினால் மியன்மாரின் மண்டலே பகுதியிலுள்ள பாலர் பாடசாலை இடிந்து விழுந்ததில் 50 குழந்தைகளும் இரண்டு ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
“மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் தங்குமிடம், உணவு, மற்றும் மருத்துவ உதவி போன்ற
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சர்வதேச மீட்புக் குழு போராடுகின்ற அதே நேரத்தில் அவசரகால மீட்புக் குழுக்கள் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடித்து உயிர்காக்கும் உதவிகளை வழங்க அயராது உழைக்கின்றன,” என்று ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.