மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு 87 தொன் அரிசி பகிர்ந்தளிப்பு!

மட்டக்களப்பில் அண்மையில் ஏற்பட்ட புயல், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் நாட்டு அரசினால் இலங்கைக்கு அரிசி பொதிகள் வழங்கியிருந்தது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இதுவரை கிடைக்கப் பெற்ற 87 தொன் அரிசி பொதிகள் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தகவல் திணைக்களப்பிரிவு இன்று (20) தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *