மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் புத்ரா ஹைட்ஸில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் நிலையத்திற்கு அருகிலு்ள எரிவாயு குழாய் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீ விபத்தில் நூற்று பன்னிரண்டு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவினால் குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதோடு குழாயின் 500 மீட்டர் பகுதி வரை தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தீக்காயங்கள் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல வீடுகளும் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை அப்பகுதியிலுள்ளவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.