மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தவக்கால முயற்சியாக இரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது.
இருதயநாதர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரால் 16 வது வருட காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் இவ் மனிதாபிமான செயற்பாடானது ஆலய பங்கு தந்தை
அருட்பணி சி.வி அன்னதாஸ் அடிளாரரின் தலைமையில் நடைபெற்றது.
ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவின் வைத்தியர் சி.விவேகானந்தன் ,இரத்தவங்கி ஊழியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது இருதயபுரம் கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் இருதயபுரம் பங்குமக்கள் என 46 குருதிக்கொடையாளிகள் குருதிக்கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.