மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(24) பிற்பகல் வேளையிலிருந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது.
இதனிடையே மின்சாரமும் இடையிடையே தடைப்பட்டு வருகின்றன.
பலத்த காற்றுடன் மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, காத்தான்குடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் பரவலாக பெய்து வருகின்றது.
இந்நிலையில் மாலை வேளையில் தற்போது இப்பகுதியில் பெய்து வருகின்றது உகைப்பு மழை பெய்து வருகின்றது.
என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பணிப்பாளர் ஏ.எஸ்.ஸியாத் தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 19.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
