மட்டக்களப்பு நாவகுடா சுகாதார பிரிவில் உள்ள உணவகங்களில் பொது சுகாதார அதிகாரிகள் திடிர் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
இதன் போது மனித பாவனைக்கு உதவாத உணவுகளை தயாரித்து விற்பனை செய்துவந்த 5 உணவு கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
.மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரனின் ஆலோசனைக்கமைய நாவற்குடா பொது சுகாதார பரிசோதகர் எஸ்.கஜனான், எஸ். அமிர்தாப், மற்றும் கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி. மிதுனராஜ் ஆகிய பிசோதகர்கள் குறித்த பிரதேசத்திலுள்ள கடைகளை சுற்றிவளைத்து பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் ரோல்ஸ், மரவள்ளிசீவல், வடை போன்ற உணவுகளை தயாரித்து விற்பனை செய்யும் 5 கடைகளில் மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த பொருட்களை கொண்டு உணவு தயாரித்து விற்பனைக்கு தயாராக வைத்திருந்த உணவு பொருட்களை மீட்டனர்.
இதனை தொடர்ந்து பல்பொருள் அங்காடி கடை ஒன்றில் எலிகடித்த சீனி மூட்டையை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் குறித்த 6 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்குல் செய்துள்ளதாகவும் அதேவேளை சுகாதாரம் பேனப்படாது மனித பாவணைக்கு உதவாத உணவுகளை விற்பனை உணவகங்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.