ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான லெபனானின் இரண்டு ஆயுத கூடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
லெபனான் எல்லைக்குட்பட்ட இரண்டு ஆயுத கிடங்குகளில் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான ஆயுதங்கள் இருந்ததாக குற்றம்சாட்டிய இஸ்ரேல் அவற்றை துல்லியமாக தாக்கியதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது. இந்த நிலையில் தான் இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.