புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்: கனடா அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்

புலம்பெயர்தலுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் கனடா அரசு, புதிய கட்டுப்பாடுகள் சிலவற்றை அறிமுகம் செய்துள்ளது குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது, ஏற்கனவே வழங்கப்பட்ட தற்காலிக குடியிருப்பு ஆவணங்களான கல்வி மற்றும் பணி அனுமதிகளை ரத்து செய்யும் வகையில் எல்லை மற்றும் புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விதி, இந்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 31ஆம் திகதி அமுலுக்கு வந்துள்ளது.

1. கல்வி மற்றும் பணி அனுமதி வைத்துள்ளவர்கள் நிரந்தரக் குடியிருப்பு அனுமதியை எட்டும்போது, அவர்களுடைய கல்வி மற்றும் பணி அனுமதிகள் ரத்து செய்யப்படும்.

2. கல்வி மற்றும் பணி அனுமதி வைத்துள்ளவர் மரணமடையும்போது அவருடைய அனுமதிகள் ரத்து செய்யப்படும்.

3. கல்வி மற்றும் பணி அனுமதி வைத்துள்ளவர்களின் அனுமதிகள், நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக தவறுதலாக வழங்கப்பட்டிருக்குமானால் அந்த கல்வி மற்றும் பணி அனுமதிகள் ரத்து செய்யப்படும்.

மேலும், குற்றப் பின்னணி, பாதுகாப்பு அச்சுறுத்தல், விண்ணப்பங்கள் செலுத்தும்போது பொய்யான தகவல்கள் வழங்கியது முதலான காரணங்களுக்காக, மின்னணு பயண அங்கீகாரம் மற்றும் தற்காலிக குடியிருப்பு விசாக்களை ரத்து செய்யவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *