கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பாப்பரசரின் உடல்நிலை தொடர்பாக வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பாப்பரசர் பிரான்சிஸுக்கு ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதால், மீண்டும் அவருக்கு செயற்கைச் சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.