பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பன்னு என்ற பகுதியிலுள்ள இராணுவ வளாகம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த தாக்குதலில், பொதுமக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதோடு 20 பேர் காயமடைந்துள்ளனர். அதேவேளை இந்த தாக்குதலில் 8 வீடுகள் வரை அந்தப் பகுதியில் சேதமடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் 12 பேர் குறித்த இராணுவ வளாகத்திற்குள் புகுந்து செல்ல முயன்றனர் அதைத் தடுத்து , இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 6 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் குல் பகதூர் குழு பொறுப்பேற்றது. 2001ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி படைக்கு எதிரான போரில் ஆப்கானிஸ்தான் தலிபானுக்கு ஆதரவாக இந்தக்குழு செயற்பட்டு வருகிறது.