தற்போது நிலவும் வறட்சியான காலவானிலை காரணமாக, நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நிலவும் வறட்சியான வானிலையினால் நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு 1939 என்ற துரித இவக்கத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.