மட்டக்களப்பு நகரை அண்மித்துள்ள பல பகுதிகளில் நாளை 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தபட உள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி நாளை சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை மட்டக்களப்பு நகரல் அமைந்துள்ள பிரதான நீர் சேமிப்பு தொட்டியினுடைய சுத்தப்படுத்தல் நடவடிக்கை காரணமாக இவ் நீர் வெட்டு அமுல்படுத்தபட உள்ளது.
இதன்படி மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனை பற்று, ஏறாவூர், ஏறாவூர் பற்று, கோறளைப்பற்று தெற்கு, வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.