நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு அடுத்தடுத்து விடுக்கப்படும் எச்சரிக்கை

ஆறுகளை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் கிங் மற்றும் நில்வளா நதிப் படுக்கைகளின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அதன்படி பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிங் கங்கை: நெலுவ, தவலம, நாகொட, நியாகம, வெலிவிட்டிய – திவிதுர, எல்பிட்டிய மற்றும் அக்மீமன ஆகிய பகுதிகள்.

நில்வளா கங்கை : பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புறுபிட்டிய மற்றும் திஹகொட ஆகிய பகுதிகள்.

இதேவேளை, நீர்மட்டம் அதிகரிப்பு காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் எதிர்வரும் நாட்களில் நாட்டின் மழை நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் தொடர் மழை காரணமாக, 9 மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகளைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *