நாடு முழுவதும் 65,000 மின் துண்டிப்புகள் – அவசர திருத்த பணிகள் ஆரம்பம்

நாடு பூராகவும் நிலவும் சீரற்ற காலநிலையினால் அநேகமான பிரதேசங்களில் மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. 

மரம் முறிந்து விழுதல், தூண்கள் உடைந்து விழுதல் போன்ற பல்வேறு அனர்த்தங்களின் காரணமாக இவ்வாறு மின்துண்டிப்புகள் இடம்பெற்றுள்ளன. இன்று காலையில் 65,000 இற்க்கும் அதிகமான மின் துண்டிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 26,000 மின் துண்டிப்புகள் மீண்டும் இயழ்பு நிலைக்கு திரும்பியுள்ளன. 

நாட்டின் சகல இடங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பாதிவாகி வருகின்றது. குறிப்பாக சகல மின் உற்பத்தி நிலையங்களுக்கும் அண்மித்த பகுதிகளிலுள்ள நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டள்ளன. இந்நிலையில், இந்த நிலைமையை நிர்வகிப்பதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜெயகொடி தெரிவித்துள்ளார். 

தேவையான எண்ணிக்கையில் பணியாளர்களை பயன்படுத்தி சகல மின் துண்டிப்புகளையும் இயழ்பு நிலைக்கு திருப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகள் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மற்றும் சகல பணியாளர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றன. 

இருந்தபோதும், மின் துண்டிப்புகளை இயழ்பு நிலைக்கு திருப்பும் செயற்பாடுகளில் சீரற்ற காலநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் மக்களுக்கு உயரிய சேவையை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *