இன்று நாம் வழிபாட்டாண்டின் புதிய காலத்துக்குள் நுழைகின்றோம். இன்றுதான் தவக்காலத்தின் தொடக்க நாள். இன்றைய சாம்பல் புதன் திருப்பலியில் பங்குபெறும் ஒவ்வொருவர் நெற்றியிலும் சாம்பல் பூசப்பட்டு மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள் என்னும் அழைப்பு தரப்படுகிறது.
ஏன் இந்தக் காலம்? இயேசுவின் பாடுகள் மரணத்தைத் தியானிக்கக்கூடிய இந்த நாட்களை அன்னையாம் திரு அவை மனமாற்றத்தின் காலமாகப் பார்க்க அழைப்பு விடுகிறது.“எவருடைய சாவிலும் நாம் இன்பங்காணுவதில்லை்”- என்கின்றார்
தலைவராகிய ஆண்டவர். எனவே, ~~மனம் மாறி வாழ்வு பெறுங்கள்” -என்கிறார் இறைவாக்கினர். எசேக்கியல் (18.32)ஆக, மனமாற்றம் பெற்று நாம் இழந்த வாழ்வை மீண்டும் பெற எமக்கு கொடுக்கப்பட்ட பெரும் வாய்ப்பே இந்தத் தவக்காலமாகும்.
நாம் இந்த நாட்களில் மேற்கொள்ளவிருக்கும் ஒறுத்தல் முயற்சிகள், நாம் வாழும் இந்த வாழ்வை அர்த்தமுள்ள முறையில் வாழ முயற்சிக்க வேண்டும். நான் எடுக்கவிருக்கும் இந்தத் தூய முயற்சி எனக்கும் கடவுளுக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்குமிடையில் நிறைவான ஒப்புரவை உருவாக்கி நிறைவாய் பயணிக்க முனைப்புப் பெறுவோம்.
அருட்பணி S.X ரவிகாந்
CMF குபங்குத்தந்தை
தூய மருத மடு அன்னை ஆலயம்,
என்சல்வத்த பங்கு