தப்போவ நீர்த்தேக்கத்தின் 18 வான் கதவுகள் திறப்பு

தப்போவ நீர்த்தேக்கத்தின் 18 வான் கதவுகள் இன்று (27) காலை திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தலா நான்கு அடி அகலம் கொண்ட 18 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், வினாடிக்கு 11,200 கன அடி நீர் நரி ஓயாவில் திறக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, புத்தளம் மற்றும் வனாத்தவில்லு பிரதேச செயலகப் பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *