கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நீர்விநியோகம் முற்றிலும் தடைபடலாம்

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால், கொழும்பு நகருக்கான நீர் விநியோகம் தடைபடாலம் என வடிகாலமைப்புச் சபை தலைவர் சந்தன பண்டார தெரிவித்தா

“மேற்கு மாகாணத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நீர் விநியோகம் வழங்கப்படுகிறது.

இருப்பினும், களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் எங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீர்மட்டம் மேலும் 7 முதல் 8 அடி வரை உயர்ந்தால், அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குவதில் எங்களுக்கு சிக்கல்கள் ஏற்படும்.

அப்படி நடந்தால், கொழும்பு நகரத்திற்கு நீர் விநியோகம் மேற்கொள்ள முடியாமல் இருக்கும். நிலைமையைக் கட்டுப்படுத்த நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.” என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *